புதன், 15 பிப்ரவரி, 2012


****السلام عليكم ورحمةلله وبركاته****
=========================
*பிறை 23.ரபீவுல் அவ்வல்.1433.-[16.2.2012*
==========================
<><><><>அற்புதம்-[1]<><><><>
**குர்ஆன் ஒரு நிரந்தர அற்புதம்**
---------------------------------------------
நபி [ஸல்]அவர்கள் காட்டிய அற்புதங்களிலேயே பெரும் அற்புதம் குர்ஆன்தான்.காரணம் [1]அன்று இருந்த மொழி நயம் மிகுந்த அரப்களுக்கே சவால் விட்டு இதைப்போன்ற பத்து சூராக்களை,அல்லது ஒரு சூராவை ,அல்லது ஒரு வசனத்தையாவது கொண்டு வாருங்கள்!பார்க்கலாம்.என்று சவால் விட்ட குர்ஆனுக்கு இதுவரை யாரும் பதில் தர முடியவில்லை.

[2]இது வரை இந்த வேதத்திலிருந்து ஒரு புள்ளி கூட மாற்ற முடியாத அளவுக்கு நிரந்தர பாதுகாப்ப்பு.

[3]அன்றைக்கு இருந்த நிகழ் காலம் பற்றி பேசியதை போல வருங்காலம் பற்றியும் தெளிவாக பேசிய அற்புதம்.
[4]இன்று புதிதாக கண்டு பிடிக்கப்படும் அறிவியல்களுக்கும் இது முன்னோடியாக இருப்பது.

[5]எல்லாவற்றுக்கும் மேலாக மனித வாழ்க்கைக்கு பின்னுள்ள மறு உலக வாழ்க்கைப் பற்றி தெளிவாக பேசுவது.
இன்னும் எத்தனையோ தனிச்சிறப்புகள் அதன் அற்புதத் தன்மைக்கு அடையாளங்களாக உள்ளன.

படிப்பினை:இறை மறை குர்ஆனுக்கு எவ்வளவு அந்தஸ்து உள்ளதோ அவ்வாறே அதை பின்பற்றினாலும் அல்லாஹ் பெரிய அந்தஸ்தை தருவான்.குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதம் அதை பின்பற்றுபவர்களையும் அது பாதுகாக்கும் இதை உணராததால்தான் இன்றைய பிரச்சினைகளே.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக