சனி, 22 ஜனவரி, 2011

பாதுகாப்புவேண்டுமா?

அப்போதுதான் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்களும் அன்னாரது மக்கா நகரதோழர்களும் மதீனா வந்துஆகவேண்டிய ஒவ்வொரு வேலையையும் கொஞ்சம் கொஞ்சமாகமுடித்து கொண்டிருக்கிறார்கள்,இன் நிலையில் ஒரு பக்கம் மக்காகாபிஃர்கள்" நம்மை எதிர்த்துக்கொண்டு ஊரை விட்டும் சென்றமுஸ்லிம்கள் மதீனாவில் நிம்மதியாக இருந்து விடக்கூடாது என்று"பல சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்க,மறுபக்கம் மதீனாவில்இருந்த இணை வைப்பாளர்களும்,யூதர்களும் நபியின்வருகையால் பல இலாபங்களை இழந்த பொறாமையால் வெந்துபோய் முஸ்லிம்களுக்கு எதிராக ப்ல திட்டங்களைத்தீட்டியவர்களாக இருந்தனர்,ஆக நபியவர்களுக்கு எதிராகநாலாபுறங்களிலும் கொலை முயற்சிகள் நடை பெற்றுவந்தன.இந்த சூழ் நிலையில்தான் ஒரு முறை ரசூலுல்லாஹிஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின்தோழர்களை நோக்கி "இன்று இரவு எனது தோழர்களில்யாராவது எனக்கு காவல் நின்றால் நன்றாக இருக்கும்" எனக்கூறினார்கள். அன்று இரவு [எங்களின் வீட்டுக்கு வெளியில்]ஆயுதங்களின் சப்தத்தை நான்கள் கேட்டோம்.யாரது? எனநபியவர்கள் கேட்ட போது,"நான் ஸஃது இப்னு அபீ வக்காஸ்வந்திருக்கிறேன்,தங்களுக்காக காவல் நிற்க வந்துள்ளேன்,என்றுகுரல் வந்தது.அன்று இரவு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நிம்மதியாக தூங்கினார்கள் எந்தளவுக்கெனில்அன்னாரது குரட்டை சப்தத்தை நான் கேட்டேன்,.என அன்னைஆயிஷா ரழியல்லாஹு அன் ஹா அவர்கள்அறிவிக்கிறார்கள்.இவ்வாறாக நபியவர்களுக்காக காவல்நின்றவர்கள் ஸஃது ரழியல்லாஹுஅன் ஹு அவர்களைப்போலமற்ற சில நபித்தோழர்களும் இருந்தார்கள்,அவர்களில் சிலர்உப்பாது இப்னுல் பிஷ்ரு,ஜுபைருப்னுல் அவாம், ஸஃதுப்னுமுஆத்,ஆகிய இவர்களும்,இன்னும் சிலநபித்தோழர்களும்[ரழியல்லாஹுஅன் ஹும்]காவல் முறை வைத்துகாவல் காத்து வந்தனர்.அல்லாஹ் எப்போதும் தனது சேவையைக்குறிக்கோளாகக் கொண்டவர்களை இவ்வாறு அச்சத்திலேயேவிட்டு விட மாட்டான் என்ற பொது நியதிக்கு ஏற்ப வசனம்ஒன்றை தனது தூதருக்கு அருளினான்:தூதரே! உமது இரட்சகன்உமக்கு இறக்கியருளியவற்றை எத்தி வையுங்கள்;மேலும்அல்லாஹ் தங்களை மக்களின் தீமைகளிலிருந்து காத்தருள்வான்;.[மாயிதா:67].

வெள்ளி, 21 ஜனவரி, 2011

மதீனாவாசிகள் மீது எம்பெருமானார்

ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த போர் பொருட்களை மிக அதிகமாக இஸ்லாத்தில் இணைவதற்காகவும், இஸ்லாத்தில் இணைந்த புதிய முஸ்லிம்களுமான குரைஷி மக்களுக்கு சூரத்து தவ்பாவின் 60வது வசனத்திற்கு ஒப்ப அல்லாஹுடைய தூதர் அவர்கள் பிரித்துக் கொடுத்தார்கள். ஆனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அன்சாரிகளுக்கு 4 ஒட்டகங்கள் அல்லது அதற்கு சமமான ஆடுகள் கொடுக்கப்பட்டன. இதனால் அன்சாரி ஸஹாபிகள் மிகுந்த மன வேதனையடைந்தார்கள். “யுத்தங்கள் ஏற்படும் போது நாம்தான் அவரது தோழர்கள். யுத்தப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் பொழுது அவரது குடும்பத்தினரும் அவரது மக்களும் ஆவார். இது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால் நாம் ஏற்றுக் கொள்வோம், அது அல்லாது இது தூதருடைய உள்ளத்தில் எழுந்த எண்ணமாக இருந்தால், நமக்கும் சலுகை செய்யுமாறு நாம் அவரை வேண்டுவோம்” என்றனர் அன்ஸாரிகள்.இதை அன்ஸாரிகளின் பிரதிநிதியான ஸஅத் இப்னு உபாதா (ரழி) அவர்கள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றார்கள். இதை கேட்ட நபி (ஸல்) “ஸஅதே! இந்த விடயத்தில் உங்கள் நிலை என்ன? என கேட்டப் பொழுது, அதற்கு ஸஅத் (ரழி) அவர்கள், நானும் அன்ஸாரிகளின் கருத்துடன் ஒத்து இருக்கிறேன்” என சொன்னார்கள். அதை கேட்ட முஹம்மது (ஸல்) அவர்கள் அவர்களை கைதிகளை அடைத்து வைத்திருந்த இடத்தில் அன்ஸாரிகளை ஒன்று கூட்டினார்கள்.அவர்களிடம் வந்த நபி (ஸல்) அவர்கள், ஓ! அன்ஸாரிகளே! எனக்கெதிரான எண்ணங்கள் உங்கள் உள்ளங்களில் எழுந்துள்ளன என்பதை நான் அறிகிறேன் என்றவர்கள். உங்களை நான் தவறியவர்களாகக் கண்ட போது இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நீங்கள் ஏழைகளை இருந்தப் பொழுது இறைவன் உங்களை செல்வந்தராக்கவில்லையா? நீங்கள் ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டியவர்களாக இருந்த உங்களை அல்லாஹ் உங்கள் இதய்ங்களை ஒன்றுபடுத்தவில்லையா? என கேட்டதும், அங்கு குழுமி இருந்த அன்ஸாரிகள். நிச்சயமாக அவ்வாறே! அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அன்பும் கருணையும் மிக்கவர்கள் என்றார்கள்.அதை தொடர்ந்து அல்லாஹுடைய தூதர் கண்ணியமிக்க முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிகளை பார்த்து, என்னை எதிர்த்து பேசமாட்டீர்களா? என கேட்டார்கள். அதைக் கேட்டதும் அன்ஸாரிகள் கலக்கமுற்றனர். உங்களை எதிர்த்து நாங்கள் எப்படி பேச முடியும்? என்றார்கள்.அதை கேட்ட நாயகம் (ஸல்) அவர்கள், நிச்சயமாக நீங்கள் விரும்பினால் உண்மையாகவே என்னைப் பார்த்து நீங்கள் இவ்வாறு கேட்கலாம்? அவமதிக்கப்பட்டவராக நீர் எங்களை வந்து சேர்ந்தீர், நாங்கள் உம்மை கவுரவித்தோம். துணையின்றி தனித்தவராக நீர் வந்தீர், நாங்கள் உமக்கு உதவி செய்தோம். வெளியேற்றப்பட்டவராக நீர் வந்தீர், நாம் உமக்கு அடைக்கலம் தந்தோம். நாம் உமக்கு ஆறுதல் தந்தோம் என நீங்கள் கேட்கலாம்.மேலும் தொடர்ந்த அல்லாஹுடைய தூதர் அவர்கள், “ஓ! அன்ஸாரிகளே! நான் உங்களை உங்களது இஸ்லாத்தின் பொறுப்பில் விட்டுள்ள நிலையில், அல்லாஹ்வை அடிபணிய அவர்களது உள்ளங்களை இணங்கச் செய்யப் பயன்படுத்திய இவ்வுலகத்தின் அற்பப் பொருட்களுக்காக உங்கள் உள்ளங்கள் சஞ்சலப்படுகிறதா?ஓ! அன்ஸாரிகளே! மக்கள் ஒட்டகங்களையும், செம்மறி ஆடுகளையும் அவர்களது வீட்டிற்கு எடுத்துச் செல்ல, நீங்கள் உங்கள் வீட்டிற்கு அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எடுத்துச் செல்வதில் திருப்தி இல்லையா? அன்ஸார்கள் ஒரு வழியிலும், மற்றவர்கள் வேறு ஒரு வழியிலும் சென்றால், உங்கள் நபியாகிய நான் அன்ஸாரிக்ள் செல்லும் வழியில்தான் செல்வேன். அன்ஸாரிகள் மீதும், அன்ஸாரிகள் மக்கள் மீதும், அவர்களது மக்களின் மக்கள் மீதும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக! என துஆச் செய்ததும், அங்கு கூடி இருந்த அன்ஸாரி ஸஹாபிகள் தம் தாடிகள் நனையும் வரை கண்ணீர் விட்டு அழுதார்கள்.எங்களது பங்காகவும், எமது உடமையாகவும் அல்லாஹ்வின் தூதரைப் பெற்றுக் கொள்வதில் நாம் முழு திருப்தி கொள்கிறோம் என்றார்கள்.

இறையச்சம்

அல்லாஹ் கூறுகிறான்:நம்பிக்கையாளர்களே!உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது கடமையாக்கப்பட்டிருந்ததைப் போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.[அதனால்] நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்.(2:183)

அன்பானவர்களே! மனிதனின் வாழ்வு பல சூழ் நிலைகளால் சூழப்பட்டுள்ளது. தவறுகளை விட்டும் தவிர்ந்து கொள்வது என்பது மிகவும் சிரமான ஒன்றாகவே உள்ளது, இதற்கெல்லாம் காரணம்;இந்த உலகத்தை அல்லாஹ் ஒரு சோதனையாக படைத்துள்ளான், அந்த சோதனைகளை சிலவற்றின்மூலம் அவன் உண்டாக்கியுள்ளான்.

மனமயக்கத்திற்கு காரணம் நான்கு பேர். ஆம்! நாம் அல்லாஹ்வை பயந்து வாழ வேண்டும் என்று என்னதான் முயன்றாலும், சில சந்தர்ப்பங்கள் நம்மையும் மிகைத்து நிலைத்தடுமாறச்செய்து விடுகின்றன. அந்த சந்தர்ப்பங்களின் கார்ணகர்த்தாக்கள் நான்குபேர் எனலாம். 1) உலக ஆசைகள், 2)குடும்ப பாசங்கள், 3) ஷைத்தான்[என்ற நமது விரோதி], 4)நமது உள்ளம்[மனோ இச்சை], இவற்றில் நமக்கு மிகவும் ஆபத்தானது நமது உள்ளம்தான்,காரணம்; இன் நான்கில் நமது உள்ளத்தைத்தவிர மற்ற மூன்றும் நம்மைவிட்டும் தனியாக உள்ளன,ஆனால் நமது உள்ளம் மட்டுமே நம்கூடவே இருந்து குழி பறிக்கின்றது. எனவேதான் யூஸுஃப்[அலை] அவர்களின் வார்த்தைகளை அல்லாஹ் தனது அருள்மறை குர் ஆனில் இவ்வாறு கூறுகிறான்:அன்றி "நான்(தவறுகளிலிருந்து)பரிசுத்தமானவன்"என்று என்னைப்பற்றி நான் கூறவில்லை,ஏனென்றால் நிச்சயமாக என் இறைவன் அருள் புரிந்தாலன்றி(மனிதனின்)மனம் பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது.(12:53).. நம்மைவிட்டும் நீக்கப்பட முடியாத நம் இதயத்தின் தீங்கை விட்டும் தப்பிக்கவேண்டுமென்றால்;அந்த இச்சையை நம் சொல்லைக் கேட்கும் வகையில் பயிற்சி செய்து பழக்கப்படுத்தவேண்டும். அந்த பயிற்சியின் பலன் தான்"தக்வா"இறையச்சமாகும். இந்த இறையச்சம் என்ற கேடயத்தின் மூலம் மனோ இச்சையின் தீங்குகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொண்டால் மறுமையில் இன்பமே இன்பம்தான்.இதையே அல்லாஹ் ,எவர் தன் இறைவனின் சன்னிதியில்(விசாரணைக்காக)நிற்பதைப்(பற்றி)பயந்து (தனது தவறான)மனோ இச்சையை விட்டும் தன்னை தடுத்துக்கொண்டாரோ,அவர் செல்லுமிடம் சுவனம்தான்.(79:40,41)

இறையருள் இன்றி முடியாது.

தோழர்களே! இந்த இறையச்சம் என்ற பாதுகாப்பு அரண் நம் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும் மட்டும் முடியக்கூடிய ஒன்றல்ல;இவற்றுக்கும் மேலாக இறையருள் தேவை,நாம் செய்யும் முயற்சிக்கும் அந்த இறையருள் அவசியம். எனவே இந்த "தக்வா"இறையச்சத்தை அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அன்னை ஆயிஷா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:ஒரு முறை நபியவர்களை எனது வீட்டில் தேடினேன்,காண முடியவில்லை,கதவைத்திறந்து பள்ளிவாசலில் பார்த்தேன்,அங்கு அன்னார் பூமியில் தலைவைத்து "ஸஜ்தா" செய்த நிலையில் "அல்லாஹும்ம ஆத்தி நஃப்ஸீ தக்வாஹா,வஜக்கிஹா அந்த ஃகைரு மன் ஜக்காஹா,அந்த வலிய்யுஹா வமவ்லாஹா".(அல்லாஹ்வே!எனது உள்ளத்திற்கு (உனது)பயபக்தியைத் தருவயாக!,அதனை பரிசுத்தப் படுத்துவாயாக!,நீதான் அதன் உதவியாளனும்,மற்றும் தலைவனுமாவாய்!என்று துஆ(பிரார்த்தனைச்செய்து கொண்டிருந்தார்கள்.அத்தகைய பயபக்தியை,அல்லாஹ் நமக்கும் தந்தருள்புரிவானாக!ஆமீன்

ஈமான்

ஒரு முறை நபி[ஸல்]அவர்களிடம் ஜிப்ரீல்[அலை]அவர்கள் வருகைத்தந்த போது,அன்னாரிடத்தில் நபியவர்கள்,பல கேள்விகளைக் கேட்டார்கள்,அவற்றில் ஒன்று;ஈமான்[விசுவாசம் கொள்ளுதல்]என்றால் என்ன?"என்பதாகும். அதற்கு ஜிப்ரீல்[அலை]அவர்கள் பதில் கூறினார்கள்:ஈமான் என்பது,அல்லாஹ்வையும்,அவனுடைய மலக்கு[வானவர்]களையும்,அவனது வேதங்களையும்,அவனது தூதர்களையும்,மறுமை நாளையும்,நன்மைத்தீமை யாவும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே நடைபெறும் என்பதையும்,மனப்பூர்வமாக நம்பி விசுவாசம் கொள்வதாகும். ஒரு முஸ்லிமின் உள்ளத்துக்குள் ஆணி வேர்களாக இருக்க் வேண்டிய அடிப்படை கொள்கைகள் இவை. இந்த நம்பிக்கைகளில் ஒன்றில் சந்தேகம் என்றாலும்,அவனை விசுவாசி[முஃமின்]என்று கூறுவது முடியாததாகும். இந்த நம்பிக்கைகளுடன் நற்செயல்களும் இணைந்திருப்பதும் அவசியமாகும்,அவை;1)வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,முஹம்மத்[ஸல்]அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவர்கள்,என்று நாவால் மொழிந்து உள்ளத்தால் உறுதி கொள்வதாகும்,2)தினமும் ஐந்து நேரம் தொழுவது,3)ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது,4)தனது பொருள்களைக் கணக்கிட்டு ஜகாத்[ஏழை வரி]கொடுப்பது,5)வசதியுடையவர்கள் ஹஜ் என்ற கடமையை நிறை வேற்றுவது. இவை யாவும் உண்மை விசுவாசியின் இலக்கணமாகும்.இந்த நம்பிக்கையும் விசுவாசமும், சில தன்மைகளை விசுவாசியின் இதயத்தினுள் பதிய வைக்க வேண்டும்,அதுதான் அவனது பூரண நம்பிக்கையின் வெளிப்பாடாகும். எல்லாம் அவனுக்காக, நபி[ஸல்]அவர்கள் அருளினார்கள்:"ஒருவர் கொள்கின்ற விருப்பும்,வெறுப்பும்,அவர் அடுத்தவருக்கு கொடுப்பதும், கொடுக்காமல் தவிர்த்துக் கொள்வதும்,[ஆக அனைத்தும்]அல்லாஹ்வுக்காக என்று ஆகி விட்டால்,அவரது ஈமான் பூரணத்துவம் பெற்றுவிட்டது,"[நூல்:முஸ்லிம்ஈமானின் இனிமை. மூன்று தன்மைகள் யாரிடத்தில் இருக்குமோ, அவர் ஈமானின் சுவையை அடைந்து கொள்வார்;1)மற்ற அனைத்து பொருட்களை விடவும் அல்லாஹ்வும், அவனது தூதரும் அந்த மனிதருக்கு பிரியமானவர்களாக ஆகி விடுவது. 2)யாரை அவர் விரும்பினாலும் அல்லாஹ்வுக்காக விரும்புவது.3)நெறுப்பில் நுழைவது எவ்வளவு வெறுப்பாக இருக்குமோ அந்தளவுக்கு குஃப்ரின்[இறை மறுப்பின்]பக்கம் மீழுவதை அவன் வெறுப்பது.[நூல் :புகாரி] நபி[ஸல்]அவர்கள் ஒரு துஆ வை அடிக்கடி கேட்பார்கள்:யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானைப் பிரியமானதாக ஆக்கி வை;. அதை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக்கி வை,உன்னை மறுப்பதையும்,பாவங்கள் புரிவதையும்,உனக்கு மாறு செய்வதையும் எங்களுக்கு வெறுப்பானதாக்கி வை,[நூல்:அஹ்மத்

சமூக நல்லிணக்கம்[3]

நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் வாழ்க்கை முழுதும் ,இது போன்ற நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. நபியவர்களிடம் வேலைச் செய்த யூத சிறுவன் ஒருவன்,நோய்வாய்ப்பட்டு இருந்தபோது, அவரை நலம் விசாரிக்க அன்னார் சென்ற நிகழ்ச்சி,நபியின் நல்லிணக்கம் மிகுந்த நன் நடத்தையை நினைவூட்டுகிறது.

ஒரு போரிலிருந்து திரும்புகின்ற வழியில் அன்னாருக்கு ஒரு யூதப்பெண் விருந்து கொடுத்த போது அதனை ஏற்றுக்கொண்டு விருந்துண்ண சென்றார்கள், அன்றைய சூழ் நிலையில் முஸ்லிம்களுக்கு பரம விரோதிகள் யூதர்களே; என்ற நிலையிருந்தும், அண்ணலாரின் இந்த சம்மதம்,அன்னாரின் ஐக்கிய உணர்வுக்கு,ஓர் அழகான அடையாளம்,என்று சொல்லலாமல்லவா?.

ஒரு முறை நபிகளாரின் உயிர் நண்பர் அபூ பக்கர் [ரழி] அவர்கள்,யூதர்கள் குழுமியிருந்த இடத்தைக் கடந்து சென்றபோது, சின்ன வாக்குவாதம் ஏற்பட்டு, அபூபக்கர்[ரழி] அவர்கள்,ஃபனுஹாஸ் என்ற ஒரு முக்கிய யூதரை ஓங்கி அறைந்து விட்டார்கள்; இந்த பிரச்சனையை யூதர்கள், நபியவர்களிடம் எடுத்துச்சென்று நியாயம் கேட்டார்கள்; காரணம்; அண்ணலாரின் பாராபச்சமற்ற, பரஸ்பர நடவடிக்கையேயாகும்.

மற்றொரு முறை, ஒரு யூதருக்கும்,முஸ்லிமாக நடித்துக்கொண்டிருந்த ஒருவருக்கும்,நிலம் சம்பந்தமாக ஒரு பிரச்சனை;யூதர்,"முஹம்மதிடம் செல்லாம்,அவர்தான் நியாயமாக தீர்ப்பு வழங்குவார்"எனக் கூறினார். ஆனால் முஸ்லிமாக ஏமற்றிக்கொண்டிருந்த[நயவஞ்சகரான]வர் மற்றவர்களிடம் செல்லலாம்,என அழைத்தார். காரணம்;நபியிடம் சென்றால், நமக்கு நியாயம் கிடைக்கும்.என்று யூதர் நினைத்தார்,ஆனால்;அவர்களிடம் சென்றால்,நமக்கு சாதகமாக[நியாயமின்றி]அவர் தீர்ப்பு வழங்க மாட்டார்.என்று, அந்த நயவ்ஞ்சகர் எண்ணினார்.

இன் நிகழ்ச்சி"மாற்றாரும் கூட முஹம்மத்[ஸல்] அவர்களின் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தனர்,என்பதை சித்தரிக்கிறது."நீதிக்கு புறம்பாக தனது சமூகத்துக்கு உதவி செய்பவன்,கிணற்றில் விழும் ஒட்டகத்தின் வாலைப்பிடித்தவன் போலாவான்," என்ற தனது பொன் மொழிக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார்கள், அந்த நபிகள் நாயகம்[ஸல்]அவர்கள்.
நபி (ஸல்)அவர்களின் வாழ்க்கையில் ஒரே இறைவன் என்ற கொள்கையை ஓங்கி ஒலித்தார்களே தவிர, மற்ற மக்களால் தெய்வங்களாக நம்பப்படுகிற எதையும் திட்டியதோ அதனை வசை பாடியதோ கிடையாது.காரணம் இது அன்னாரின் நாகரீகம் என்றும் கூறலாம்,அதே சமயம் அல்லாஹ்வின் கட்டளையும் அதுவாகத்தான் இருந்தது.அல்லாஹ் .கூறுகிறான்:[நம்பிக்கையாளர்களே!]அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் இறைவன் என அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்.[6:108] இவ்வசனத்தின் இலக்கணமாகவே இறைத்தூதர் அவர்கள் வாழ்ந்தார்கள். இஸ்லாம் தனது இனிய அணுகு முறைகளால் நாளுக்கு நாள் வளர்ந்த்து வருவதை பொறுக்க முடியாத எதிரிகள் முஸ்லிம்களுக்கு பல இன்னல்களை தந்தனர்,அவற்றை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயச்சூழ் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டனர்.அதனால் உண்டானவைதான் அன்றைய போர்கள்.போர் என்றாலே மனிதம் செத்துப்போய் விடும் என்பதை நாம் அறிவோம். அத்தகைய போரிலும் நபியின் போதனை வித்தியாசமாகவும்,விசித்திரமாகவும் இருக்கும்.போருக்கு புறப்படும் வீரர்களை நோக்கி,"அல்லாஹ்வின் அணியினரே!எதிரிகளின் அணியில் இருக்கும் பெண்களையோ, குழந்தைகளையோ,அந்த பகுதியின் ஆலயங்களிலும் கோவில்களிலும் மக்களுக்கு குருக்களாக இருந்து வணக்கம் நடத்துகின்ற மத போதகர்களையோ கொல்லாதீர்கள்.அந்த மக்களின் வணக்க இடங்களை இடிக்காதீர்கள்.அந்த பகுதியின் முன்னேற்றத்திற்கு காரணமாக உள்ள விவசாயங்களை சேதப்படுத்தாதீர்கள்,ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தவர்களைக் கொல்லாதீர்கள்".என்று உபதேசம் செய்வார்கள்.இவை மட்டுமல்ல. இன்னும் அனேக எடுத்துக்காட்டுகள் உள்ளன்.இவையாவும் நமக்கு போதிக்கும் செய்தி ஒன்றுதான்.அதாவது இஸ்லாம் வன்முறை மார்க்கமல்ல,மாறாக,எல்லா வகையிலும் சமூகத்தின் நல்லிணக்கத்தையும் நன்மையையுமே நம் இலட்சியமாகக் கொள்ளவேண்டும்,என்பதே அந்த செய்தி.இதுவே நம் வழியாக மாறினால் நம் வாழ்வு முழுவதும் ஆனந்தம் பொழியும்,பொழிய வேண்டும்.பாடுபடுவோம் வாருங்கள்! [நல்லிணக்கம் தொடரும்.....]

சமூக நல்லிணக்கம்[2]

வரலாற்று ஒளியில் நம் நெஞ்சை நெகிழவைக்கும் மற்றொரு நிகழ்ச்சியையும் காணுகிறோம்;நபியவர்களுக்கு நபிப்பட்டம் கிடைப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்[நபியின் 35 -வது வயதில்] கஃபா புதுப்பித்துக் கட்டும் பணி நடைபெற்றது, வேலை வெற்றிகரமாக முடியும் நிலையில் மிகப்பெரிய பிரச்சினை ஒன்று வெடிக்கிறது; "ஹஜ்ருல் அஸ்வத்" என்ற புனிதக் கல்லை அதன் இடத்தில் எடுத்து வைத்து பதிப்பது யார்? அந்த பாக்கியம் தங்களுக்கே வேண்டும் ; என்று அவர்களில் ஒவ்வொருவரும் வாதிட்டார்கள். நிறைவடைய இருந்த புனித வேலை தடைப்பட்டு முடங்கி நின்றது; இதை எதிர் கொள்வது எப்படி என்று வழி தெரியாமல் தலைவர்கள் விழி பிதுங்கி நின்றார்கள். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டி,மக்காவில் வாழும் அனைத்து கிளையினரும் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவாவது;"நாளை அதிகாலையில் விடியும்முன் முதன்முதலாக எவர் [ ஹரம் என்ற அந்தப்] பள்ளிக்குள் நுழைகிறாரோ அவரே அந்த கல்லை எடுத்து வைப்பார்". முடிவின்படி அதைக்கண்காணிக்க ஒரு குழு நியமனம் செய்யப்பட்டு கண்காணித்துக்கொண்டிருந்தனர். அதிகாலைக்கருக்கல் நேரம், ஒரு உருவம் மெதுவாக உள்ளே நுழைந்து; கஃபா வுக்கு முன் சென்று, தொழுகையை ஆரம்பித்தது. கண்காணித்தவர்கள்,ஓடிச்சென்று "யார் அந்த பாக்கியசாலி" என்று ஆவலோடு பார்த்து விட்டு;இதோ இவர் நம்பிக்கையாளர், உண்மையாளர்,என்று சப்தம்போட்டு அழைத்தனர். ஓடி வந்த மக்கள் அங்கு நின்றுகொன்டிருந்த முஹம்மத் நபி[ஸல்] அவர்களைப் பார்த்து"இவர்தான் இதற்கு தகுதியானவர்" எனக்கூறியவர்களாக; அவர்களது கரத்தைப் பிடித்து வாழ்த்துக்கூறினார்கள். விடிந்த பிறகு "புனிதக்கல் பதிக்கும் நிகழ்ச்சி" நடை பெறுகிறது; அதனைக்காண மக்கள் கூட்டம் அலைக்கடலெனத் திரண்டிருக்க,நபியவர்கள், தனது தோளில் கிடந்த கணமான ஒரு துணியை எடுத்து கீழே விரித்து அதன் மீது அந்த புனிதக்கல்லை தூக்கி வைத்துவிட்டு, அங்கு ஓர் அறிவிப்பு செய்கிறார்கள்;"மதிப்பு மிகுந்த இந்த மக்காவின் கிளையார்களின் தலைவர்கள் தயவு செய்து முன்னால் வாருங்கள்!; ஒன்றும் புரியாத அந்த தலைவர்கள் முன்னால் வந்து நிற்கிறார்கள். அவர்களை நோக்கி நபியவர்கள்; இந்த துணியின் ஓரங்களைப் பிடித்து தூக்குங்கள்! என்று கூற அவர்களும் தூக்கினர். உடனே அன்னார் அந்த கல்லை எடுத்து அதன் இடத்தில் வைத்தார்கள். பிரச்சினை முடிவுக்கு வர,மக்கள் மகிழ்ச்சியோடு களைந்து போனார்கள். தனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பைப் பயன் படுத்தி தான்பெரியாளாக வேண்டும் என்று எண்ணி விடாமல், "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற கொள்கையோடு அனைத்து சமூக மக்களையும் நல்லிணக்கத்தோடு அரவணைத்து வாழ்ந்த இந்த பாங்கு யாருக்கு வரும்?. "ஒரே இறைவன்" என்ற கொள்கைப் பிரச்சாரம் பிடிக்காத ஒரே காரணத்திற்காக பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அன்னாரின் மீது ஒரு வயதான மூதாட்டி ஒவ்வொரு நாளும் குப்பைகளை கொட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்,ஆனால் ஒரு குப்பை விழாததைக் கண்ட அவர்கள்;எங்கே அந்த நல்லிணக்கம் தொடரும்...மூதாட்டி ?' என்று விசாரிக்க, அவர் நோய் வாய்ப்பட்டுள்ளார்,என்று கூறப்பட்ட போது; அவரது வீடு தேடிச்சென்று"தாயே! எப்படி இருக்கிறீர்? தங்களுக்கு ஏதாவது உதவி தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள்;"என்று அன்போடு விசாரித்த போது நெகிழ்ந்து போன அந்த தாய்,அக்கணமே இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தார். இத்தகைய நெஞ்சை நெகிழ வைக்கும் நிஜமான நிகழ்ச்சிகள் ," நபிகளாரின் நல்லிணக்க வாழ்வுக்கு நற்சான்றுகள்" நல்லிணக்கம் தொடரும்....

]

சமூக நல்லிணக்கம்.[1]

இந்த உலகம் முழுவதும் விரிந்து காணப் படும் உயரிய மார்க்கமகிய இஸ்லாம் என்றவிருட்சம்,தனது அமைதிஎன்ற தென்றலை அகிலம் முழுவதும்தவழ
வைத்துக்கொண்டுள்ளது. இஸ்லாம் என்ற இந்த மார்க்கத்தை நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் உலகில் எடுத்துச்சொல்ல ஆரம்பித்த போது மிகப்பெரிய எதிர்ப்புகளும் சோதனைகளும் சூராவலியாய் வீசின .என்னதான் எதிற்புகள் வந்தாலும் சொல்லப்பட்ட கருத்துகளும் அவற்றுள் பொதிந்திருந்த சமத்துவ நீதிகளும் பின் தங்கிய மக்களையும் விடுதலைக்காக ஏங்கிய வறியவர்களையும் இஸ்லாமிய மார்க்கத்தில் கொண்டுவந்து இணைய வைத்தன. பின் தங்கிய மக்களின் மறுமலர்ச்சிக்காக பாடுபடும் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் தட்டு மக்களின் எதிர்ப்பை சம்பாதிதுக்கொள்ளவேண்டும் என்பது தெரிந்த ஒன்றுதான், அவ்வாறே நபிகள் நாயகம்[ஸல்]அவர்களுக்கு அந்த மக்கள் பலமான எதிர்ப்பைக்காட்டினாலும் அந்த மக்களின் உள்ளங்களில் நபியின் மரியாதை நிரைந்தே இருந்தன, "அஸ்ஸாதிq" [உண்மையாளர்] "அல் அமீன்"[நம்பிக்கையாளர்]என்ற நபியைப்பற்றிய நற்குணத்திரு நாமங்கள் aவர்களின் பாறைப்போன்ற இதயங்களில் கல்வெட்டுக்களாக பதிந்திருந்தன.காரணம் அன்றைய மக்களிடம் அன்னார் ஏற்றத்தாழ்வின்றி பாகுபாடின்றி அன்போடும் கருணையோடும் நெறியோடும் நேர்மையோடும் நடந்து கொண்டார்கள்,அதேசமயம் அவர்களின் முரண்பாடன கொள்கைகளுக்கு ஒத்துப்போகக்கூடியவர்களாகவும் இருக்கவில்லை. சுருங்கச்சொன்னால் உயிரை நேசித்தார்கள் ஊடல்களை நேசிக்கவில்லை மனிதனை நேசித்தார்கள் சொந்த மாசுகளையும் மாயைகளையும் நேசிக்கவில்லை. மேலும் அவர்களுக்குள் ஊடுருவிப்போயிருந்த பாழாய்ப் போன பழக்க வழக்கங்களைக் கண்டு வருந்தினார்கள், அவற்றைக் களைவது எப்படியென்று கவலைப்பட்டார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். இன வெறியும்,மொழி வெறியும் மிகுந்த அன்றைய அரபு மக்களின் உள்ளத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரு குடும்பம்,ஒரு சமூகம் என்ற மகத்தான மனித நேயத்தை பதிய வைத்தார்கள். அருள் மறை குர் ஆனின் வசனமாகிய"மனிதர்களே!உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண்,ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம்.பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்,(அதனை வைத்து பெருமையடித்துக் கொள்வதற்காக அல்ல)"[49:13]என்ற வசனத்தின் விளக்கமாகவும் முன்மாதிரியாகவும் வாழ்ந்தார்கள் சிறுவராய் இருந்த ஃஜைத் என்பவர் மக்கவின் கடைத்தெருவில் வைத்து அடிமையாக விற்பனைச்செய்யப்பட்டார்,அவரைவிலைகொடுத்து வாங்கிய முஹம்மத் [ஸல்] அவர்களின் அருமை மனைவி கதீஜா அம்மையார் அவர்கள் அவரை தனது கணவருக்கு அன்பளிப்பு செய்து இவரை பணிவிடைக்காக வைத்துக்கொள்ளுங்கள்,எனக்கூறினார்கள். அந்த ஜைத் மக்கவின் உயர் குடும்பாகிய குரைஷி கூட்டத்தைச்சார்ந்த்தவரும் அல்லர்,அல்லது அந்த ஊரைச்சார்ந்தவரும் அல்லர், அப்படியிருந்தும் நபியவர்கள் அவரிடம் வேற்பாடு எதுவும் காட்டாமல் தன் சொந்த் பிள்ளையைப்போன்று அரவணைத்துக்கொண்டதால் அவர் நபியை தனது பெற்றோரை விட நேசித்தார். சில வருடங்களுக்குப்பிறகு அவருடைய பெற்றோர் இவர் இருக்கும் இடத்தைக்கேள்விப்பட்டு ஆவலோடு வந்து அள்ளி அணைத்துக்கொண்டு ஆனந்தமடைந்தார்கள். அதன் பிறகு அண்ணலார் நபி [ஸல்] அவர்களிடம் சென்று எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம், எங்கள் மகனை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறிய போது,நற்குண நாயகம்[ஸல்] அவர்கள் கூறினார்கள்:இவர் உங்களுடைய மகன், உங்களுக்கு சொந்தமானவர், அவரும் நீங்களும் விரும்பினால் தாராளமாக அழைத்துப்போகலாம், அதற்காக எனக்கு எந்த தொகையும் தேவையில்லை. ஜைதின் பெற்றோர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை, பிரச்சினை இவ்வளவு இலகுவாக முடியுமென்று நினைக்கவேயில்லை,தங்களின் செல்ல மகன் ஜைதிடம் சென்றார்கள், மகனே! உன்னை அழைத்துச்செல்ல முஹம்மதிடம் அனுமதி பெற்று விட்டோம்;எனவே உடனே புறப்படு; நம் பந்தங்கள் உன்னைப்பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள், என்று கூறினார்கள். இதனைக்கேட்ட மகன் ஜைத், "எனதருமைப்பெற்றோர்களே!தங்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி; ஆனால் நான் தங்களோடு வரமுடியாது;காரணம் எனது நேசர் நபி [ஸல்] அவர்களை விட்டு விட்டு ஒரு போதும் என்னால் இருக்கமுடியாது,"என்று கூறினார். அவரது இந்த பதில் நபியின் அன்பான அணுகு முறையை அடையாளப்படுத்துகிறது .
நல்லிணக்கம் தொடரும்...