ஒரு பாட்டி துணி தைக்க தான் வைத்திருந்த ஊசியைத் தொலைத்துவிட்டாள். வீதிக்கு வந்து தெரு விளக்கு வெளிச்சத்தில் அதைத் தேடிக்கொண்டிருந்தாள். அவளது பேரன் அவளிடம் வந்து ‘பாட்டி என்ன தேடுகிறாய்?’ என்று கேட்டான். அதற்கு பாட்டி ஊசி ஒன்று வைத்திருந்தேன், அதைத்தான் தேடுகிறேன் என்றாள். பேரன் கேட்டான் ஊசியை எங்கே தொலைத்தாய்? பாட்டி சொன் னாள் ‘வீட்டிற்குள்தான் தொலைத்துவிட்டேன்’
பேரன் கேட்டான்: வீட்டிற்குள் ஊசியைத் தொலைத்துவிட்டு வீதியில் வந்து தேடுகிறாயே?’
பாட்டி சொன்னால்: ‘வீட்டிற்குள் விளக்கு இல்லை எனவே வெளிச்சமில்லை அதனால் வெளிச்சம் உள்ள வீதியில் அதைத் தேடுகிறேன்’
எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? பயன் உள்ள செயல் கடினமானது என்று கருதிக் கொண்டு தேவையில்லாத எளிய செயல்களில் ஈடுபடுவதும் இதுபோலத்தான்
“THE MOST DIFFICULT THINGS ONLY CAN BRING YOU SUCCESS, PROSPERITY, FAME AND POPULARITY” என்றார் பென் ஜான்சன் என்ற அறிஞர்.
‘மிகக் கடுமையான பணிகள் முலமே வெற்றி, செல்வம், பெயர், புகழ் ஆகியவற்றை அடைய முடியும்’ என்பதே அதன் பொருள் ‘முழுமனதோடு’ பாடுபடுங்கள் தோல்விகளைக் கண்டு துவளாமல் பாடுபடுங்கள். கடுமையான பணி என்று அஞ்சாமல் பாடுபடுங்கள்! வெற்றி உங்கள் விலாசத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு உங்கள் வீடுவந்து சேரும்!