புதன், 15 பிப்ரவரி, 2012

அற்புதம் ஆனால் உண்மை.-நாளை[15.2.2012] முதல் தொடர்கிறது.

இன்ஷா அல்லாஹ் நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் [ஸல்]அவர்களின் வாழ்க்கையில் நடை பெற்ற முஃஜி ஸா என்னும் அற்புதங்களை தினமும் கூற இருக்கிறோம்,நண்பர்கள் நாம் பதிவு செய்யும் இவற்றில் எதாவது தவறுகள் இருந்தால் தாராளமாக தட்டிக்கேட்க்கலாம்,மாறாக இதற்கு சம்மந்தமில்லாத விஷயங்களை புகுத்தி தானும் குழம்பி பிறரையும் குழப்ப வேண்டாம்! என்பதை மிகவும் தயவோடு கேட்டுக்கொள்கிறோம்,
முஃஜிஸா] அற்புதம் என்றால் என்ன?மனித அறிவுக்கு அப்பாற்பட்டு அவனால் முடியாத ஒன்றை அல்லாஹுத்தஆலா தனது தூதர்களின் மூலம் உலக மக்களுக்கு காட்டி தனது ஆற்றலுக்கு அடையாளமாக வலுப்படுத்தும் அதிசயங்களுக்கு சொல்லப்படும்.
இத்தகைய அதிசயங்களை அநேக இறைத்தூதர்களும் இவ்வுலகில் காட்டியுள்ளனர்,அவ்வாறே நமது நபி முஹம்மது [ஸல்]அவர்களும் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர்,அவற்றைத்தான் ஆதாரப்பூர்வமாக இங்கு காணப்போகிறோம்.

நபி[ஸல்]அவர்கள் இவ்வுலகில் காட்டிய அற்புதங்கள் 1000,என்றும் சிலர் 3000 என்றும் கூறுகின்றனர்[அல்லாஹ்வே மிக அறிந்தவன்]

இதன் நோக்கம் []நபியின் வாழ்வில் நிகழ்ந்தவைகளில் எல்லாமே படிப்பினைக்குரியவையாக இருந்தும் கூட இவ்வாறான செய்திகளை கூறுவது அருகிவிட்டன காரணம் [தெளிவானது]தேவை இல்லை,[]நபியின் தனித்தன்மைகளை இதன் மூலம் உணர்ந்து நபியின் மீது அதிகமான கண்ணியமும் அன்பும் கொள்வதுதான்.

அல்லாஹ் நமது நல்ல நோக்கங்களை நிறைவேற்றி அருள் புரிவானாக!ஆமீன்.

இன்ஷா அல்லாஹ் நாளை முதல் ஆரம்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக