ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

கண்மணி நாயகத்தின் தனித்தன்மைகள்


அருமை சகோதரர்களே!இன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதம் உதயமாகி இருக்கிறது[அல்ஹம்து லில்லாஹ்]இன்ஷாஅல்லாஹ் இன்று முதல் நமது தளத்தில் நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப் பட்டு இருந்த தனிப் பெரும் சிறப்புகளை தினமும் ஒரு சிறப்பு என்ற முறையில் சொல்லுகிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்,

ரபீவுல் அவ்வல்.1433.
சிறப்பு:-(1)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் [ஃகத்முன் நுபுவ்வத்]நபித்துவத்தின் முத்திரையாக வந்தவர்கள் அன்னாருக்குப் பிறகு இறைத்தூதர்களின் வருகை முடிந்து விட்டது,இதைப் பற்றி அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்:

33:40 مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
  

சிறப்பு:-(2)
النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ ۖ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ ۗ وَأُولُو الْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَىٰ بِبَعْضٍ فِي كِتَابِ اللَّهِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُهَاجِرِينَ إِلَّا أَن تَفْعَلُوا إِلَىٰ أَوْلِيَائِكُم مَّعْرُوفًا ۚ كَانَ ذَٰلِكَ فِي الْكِتَابِ مَسْطُورًا
இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர் . 

இப்போது சொல்லுங்கள்! நபி நம்மைப்போன்றவர்களா?



சிறப்பு:-(3)
ஒரு அமலைச்செய்வதற்கு ஆணை இடும்போது தன்னையும் மலக்குகளையும் உதாரணம் காட்டி சொல்லக்கூடிய ஒன்றே ஒன்று இந்த ஸலவாத் மட்டுமே அப்படியென்றால் ஸலவாத் எவ்வளவு உயர்ந்த அமலாகும் என்பதைவிளங்க முடிகிறதல்லவா?இத்தகைய சலவாத்துக்கு சொந்தக்காரர் என்ற சிறப்பு வேறு யாருக்காவது உண்டா?

அல்லாஹ் கூறுகிறான்: إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.33:56.

இப்போது சொல்லுங்கள்! நபி நம்மைப்போன்றவர்களா?
 



சிறப்பு:-(4)
ஒரு பெண் தான் இஷ்ட்டப்பட்டு தன்னை நபிக்கு ஒப்படைத்தால் நபியும் அந்த பெண்ணை விரும்பினால் அவளை திருமணம் முடித்துக் கொள்ளலாம்,இதன் கருத்து என்னவென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு மட்டும் நான்கு பெண்களை விட அதிகமாக மணம் முடித்துக்க கொள்வது கூடும் இந்த கருத்தை சொல்லும் பின்வரும் வசனம் அருளப்பட்ட சமயம் நபி [ஸல்]அவர்களுக்கு ஒன்பது மனைவிமார்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இதைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

وَامْرَأَةً مُّؤْمِنَةً إِن وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَن يَسْتَنكِحَهَا خَالِصَةً لَّكَ مِن دُونِ الْمُؤْمِنِينَ
அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்;33:51.

சில பெண்கள் நபியிடம் வந்து இவ்வாறு தன்னை அவர்களுக்கு ஒப்படைப்பதாக சொன்ன பொது மறுத்து விட்டார்கள் என்ற ஹதீஸ் புகாரி போன்ற நூற்களில் வந்துள்ளன.

இப்போது சொல்லுங்கள் நபி நம்மைப் போன்றவர்களா?



சிறப்பு:-(5)
நம் நபிக்கு முன் அன்னாரின் சப்தத்தை விட தன் சப்தத்தை யாராவது உயர்த்தி பேசினால் அவ்வாறு பெசியவரின் நன்மைகள் அழிந்து விடும், அந்த அளவு நபி சல்லள்ளஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்பாக அடக்கமாக இருக்க அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.அல்லாஹ் கூறுகிறான்:

முஃமின்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள்; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன்; நன்கறிபவன்.
முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.
49:1,2.
இப்போது சொல்லுங்கள் நபி நம்மைப் போன்றவர்களா?
 



சிறப்பு:-(6)
தொடர் நோன்பு என்பது நபியைத் தவிர மற்றவர்களுக்கு ஆகுமாக்கப்படவில்லை அதாவது ஒருவர் நோன்பு வைத்து அதை திறக்க வேண்டிய நேரம் வரும் போது திறந்து விட வேண்டும் அதன் பிறகுதான் அடுத்த நோன்பை ஆரம்பிக்க வேண்டும்,அவ்வாறு நோன்பு திறக்காமல் அடுத்த நோன்பை ஆரம்பிப்பதை நபி{ஸல்]அவர்கள் தடுத்தார்கள்,ஆனால் இவ்வாறான நோன்பை நபியவர்கள் வைக்கக்கூடியவர்களாக இருந்தனர் அதை கண்ட நபித்தோழர்கள் காரணம் கேட்ட போது பதிலளித்த நபியவர்கள்"நான் உங்களைப் போன்றவர் அல்ல நான் எனது இரட்ச்சகனின் சமூகத்தில் இரவு தங்குகிறேன் அந்த இரட்ச்சகன் எனக்கு உணவும் குடிப்பும் வழங்குகிறான்"[நூல்:புகாரி முஸ்லிம்].
இப்போது சொல்லுங்கள்! நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்மைப் போன்றவர்களா?
 


சிறப்பு:-(7)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவிமார்களில் ஒருவர் ஏதாவது தவறு செய்தால் [அல்லாஹ் காப்பாற்றுவானாக]அதற்கான தண்டனை மற்றவர்களுக்கு வழங்கப் படுவதை விட இரட்டிப்பாக வழங்கப்படும் அவ்வாறே நன்மை செய்தால் அதற்கான கூலி இரட்டிப்பாக வழங்கப்படும்.இதில் முதல் வகை[நடக்காது நபி அவ்வளவு பரிசுத்தமானவர்கள்] நடக்கவில்லை இரண்டாவது வகையை கவனிக்கையில் இது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்காக வழங்கப்பட்ட சிறப்பாகும்.
அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக!

33:30 يَا نِسَاءَ النَّبِيِّ مَن يَأْتِ مِنكُنَّ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ يُضَاعَفْ لَهَا الْعَذَابُ ضِعْفَيْنِ ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا
33:30. நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!

33:31 وَمَن يَقْنُتْ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا نُّؤْتِهَا أَجْرَهَا مَرَّتَيْنِ وَأَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيمًا
33:31. அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.

[நபியவர்களின் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது இட்டுக்கட்டப்பட்ட போது அதைக் கண்டித்த அல்லாஹ் அதற்காக பத்துக்கு மேற்பட்ட வசனங்களை இறக்கி வைத்து ஆயிஷா ரளியல்லாஹுஅன்ஹா அவர்களை பரிசுத்தமானவர்கள் என்று பகிரங்கப் படுத்தினான் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்]

இப்போது சொல்லுங்கள் நபி நம்மை போன்றவர்களா?





சிறப்பு:-(8)
ஏழைகள் யாராக இருந்தாலும் ஜகாத் பெறுவதற்கு தகுதி இருந்தால் வாங்கலாம்,ஆனால் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்கோ அவர்களுடைய குடும்பத்தினருக்கோ யாருக்கும் ஜகாத் பெருவதும் அதை சாப்பிடுவதும் அறவே கூடாது,இது நம் நபியின் தனிச்சிறப்புகளில் ஒன்று எனலாம்,காரணம் அல்லாஹ் அவர்களை அந்தளவுக்கு உயர்வானவர்களாகவும் பரிசுத்தமனவர்களாகவும் ஆக்கியுள்ளான:

عن أبي هريرة رضي الله عنه قال : أخذ الحسن بن علي رضي الله عنهما تمرة من تمر الصدقة ، فجعلها في فيه ، فقال النبي صلى الله
عليه وسلم : كخ كخ ليطرحها ، ثم قال : أما شعرت أنا لا نأكل الصدقة
صحيح البخاري ( 2 / 542 ) صحيح مسلم ( 2 / 571-
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:ஒரு முறை நபியின் பேரன் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் [சிறுவராக இருந்த போது]ஸதகாவின் பொருளாக வந்த பேரித்தம் பழத்தை எடுத்து வாயில் வைத்து விட்டார்கள்,இதனை கண்ட நபியவர்கள் ஹஸன் அவர்களின் வாயில் இருந்த பேரித்தம் பழத்தை எடுத்து தூக்கி எரிந்து விடுமாறு கூறி விட்டு மகனே!நாம் ஸதகா [ஜகாத்]பொருளை சாப்பிடுவது கூடாது என்று உனக்கு தெரியாதா?என்று கூறினார்கள்.ஆதாரம்:புகாரி,முஸ்லிம்.

இந்தளவு அவர்களை அல்லாஹ் அந்தஸ்தால் உயர்த்தி வைத்திருக்கும் போது,இப்போது கூறுங்கள்!





சிறப்பு:-(9)
நாமெல்லாம் உறங்கினால் நமது இதயமும் சேர்ந்து உறங்கும் அதனால் வெளியில் என்ன நடக்கிறது என்று நாம் உணர முடிவதில்லை ஆனால் நமது கண்மணியான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறங்கினால் கண்கள் உறங்கும் இதயம் உறங்காதாம்,அதனால் நபியின் உறக்கத்தால் உழு முறியாது,அன்னாரின் தூக்கத்தில் காணும் கனவு வஹி[இறை அறிவிப்பு]எனக் கருதப்படும்.[மற்ற இறைத்தூதர்களுக்கும் இதே சிறப்பு உண்டு]

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்:
என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) வீட்டில் நான் ஓரிரவு தங்கினேன். இரவில் ஒரு பகுதி கழிந்ததும் நபி(ஸல்) (உறக்கத்திலிருந்து) விழித்தார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த தோல் பையிலிருந்து சுருக்கமாக உளூச் செய்தார்கள். பின்னர் எழுந்து தொழலானார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) செய்தது போன்று உளூச் செய்து அவர்களின் இடப்புறமாக நின்று கொண்டேன். அவர்கள் என்னைப் பிடித்துத் தம் வலப்புறமாக நிறுத்தினார்கள். பின்னர் அல்லாஹ் நாடியதைத் தொழுதுவிட்டு குறட்டைவருமளவு படுத்துறங்கினார்கள். அவர்களிடம் (ஸுப்ஹ்) தொழுகை பற்றி முஅத்தின் அறிவிப்பதற்கு வந்தபோது அவருடன் தொழுகைக்காகச் சென்றார்கள். (மீண்டும்) உளூச் செய்யாமலே தொழுகை நடத்தினார்கள்.
நபி(ஸல்) அவர்களின் கண்கள் உறங்கும்; உள்ளம் உறங்காது என்று சிலர் கூறுகிறார்களே என்று அம்ரிடம் கேட்டேன். அதற்கவர், 'நபிமார்களின் கனவுகள் வஹீயாகும்' என்று கூறிவிட்டு,"மகனே! உன்னை நான் அறுப்பதாகக் கனவு கண்டேன். (திருக்குர்ஆன் 37:102) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள் என சுஃப்யான் கூறுகிறார்.புகாரி 859.

ஆயிஷா [ரலி]அவர்கள் கூறுகிறார்கள்: 'இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன. என் உள்ளம் உறங்குவதில்லை' என்று விடையளித்தார்கள்' என்றும் ஆயிஷா(ரலி) கூறினார்.புகாரி,1147.
நம்மில் யாருக்காவது இந்த சிறப்பு உண்டா?இல்லையல்லவா?

இப்போது சொல்லுங்கள் நபி நம்மைப் போன்றவர்களா?
 



சிறப்பு:-(10)

நமக்கெல்லாம் ஐந்து நேரத்தொழுகையைத் தவிர மற்ற எந்த தொழுகையும் கட்டாயக் கடமை இல்லை நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தஹஜ்ஜுத் என்ற இரவுத்தொழுகையும் கட்டாயமாக இருந்தது.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا
17:79.
இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்.

நபி [ஸல்]அவர்கள் கூறுகிறார்கள்:மூன்று காரியங்கள் உங்களுக்கு சுன்னத்தாகவும் எனக்கு அவை கடமையாகவும் உள்ளன,(அ)வித்ரு தொழுவது,(ஆ)மிஸ்வாக்[பல்லை விலக்கி சுத்தம்]செய்தல்,(இ)இரவுத்தொழுகை[தஹஜ்ஜுத்]தொழுதல்.-பைஹகி.

நபிக்கு வழங்கப்பட்ட இந்த தனிக்கடமை நபியின் தனிச்சிறப்பையே காட்டுகிறது,

இப்ப சொல்லுங்க நபி நம்மை போன்றவர்களா?



 
சிறப்பு:-(11)நாம் இந்த உலகில் வாழ்ந்து மரணமடையும் போது நாம் விட்டுச்செல்லும் பொருள்களுக்கு நமது பிள்ளைகள் மனைவி பெற்றோர் மற்றும் இதர உறவினர் நமது பொருளுக்கு வாரிசாக[பங்காளி]ஆகிறார்கள் ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் விட்டுச்சென்ற எந்த சொத்துக்கும் யாரும் வாரிசாக முடியாது,
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:நாங்கள் இறைத்தூதர்கள் எங்கள் பொருள்களில் யாரும் பங்காளியாக உரிமை கொண்டாட முடியாது,எங்கள் பொருள்கள்[எங்களின் மறைவுக்குப் பின்]அல்லாஹ்வின் பாதையில் தர்மப் பொருளாக ஆக்கப்படும்.-அல்ஹதீஸ்

இந்த சட்டம் நமக்கு கிடையாதல்லவா?

இப்போது சொல்லுங்கள் நபி நம்மைப் போன்றவர்களா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக