ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

கண்மணி நாயகத்தின் தனித்தன்மைகள்


அருமை சகோதரர்களே!இன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதம் உதயமாகி இருக்கிறது[அல்ஹம்து லில்லாஹ்]இன்ஷாஅல்லாஹ் இன்று முதல் நமது தளத்தில் நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப் பட்டு இருந்த தனிப் பெரும் சிறப்புகளை தினமும் ஒரு சிறப்பு என்ற முறையில் சொல்லுகிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்,

ரபீவுல் அவ்வல்.1433.
சிறப்பு:-(1)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் [ஃகத்முன் நுபுவ்வத்]நபித்துவத்தின் முத்திரையாக வந்தவர்கள் அன்னாருக்குப் பிறகு இறைத்தூதர்களின் வருகை முடிந்து விட்டது,இதைப் பற்றி அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்:

33:40 مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
  

சிறப்பு:-(2)
النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ ۖ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ ۗ وَأُولُو الْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَىٰ بِبَعْضٍ فِي كِتَابِ اللَّهِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُهَاجِرِينَ إِلَّا أَن تَفْعَلُوا إِلَىٰ أَوْلِيَائِكُم مَّعْرُوفًا ۚ كَانَ ذَٰلِكَ فِي الْكِتَابِ مَسْطُورًا
இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர் . 

இப்போது சொல்லுங்கள்! நபி நம்மைப்போன்றவர்களா?



சிறப்பு:-(3)
ஒரு அமலைச்செய்வதற்கு ஆணை இடும்போது தன்னையும் மலக்குகளையும் உதாரணம் காட்டி சொல்லக்கூடிய ஒன்றே ஒன்று இந்த ஸலவாத் மட்டுமே அப்படியென்றால் ஸலவாத் எவ்வளவு உயர்ந்த அமலாகும் என்பதைவிளங்க முடிகிறதல்லவா?இத்தகைய சலவாத்துக்கு சொந்தக்காரர் என்ற சிறப்பு வேறு யாருக்காவது உண்டா?

அல்லாஹ் கூறுகிறான்: إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.33:56.

இப்போது சொல்லுங்கள்! நபி நம்மைப்போன்றவர்களா?
 



சிறப்பு:-(4)
ஒரு பெண் தான் இஷ்ட்டப்பட்டு தன்னை நபிக்கு ஒப்படைத்தால் நபியும் அந்த பெண்ணை விரும்பினால் அவளை திருமணம் முடித்துக் கொள்ளலாம்,இதன் கருத்து என்னவென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு மட்டும் நான்கு பெண்களை விட அதிகமாக மணம் முடித்துக்க கொள்வது கூடும் இந்த கருத்தை சொல்லும் பின்வரும் வசனம் அருளப்பட்ட சமயம் நபி [ஸல்]அவர்களுக்கு ஒன்பது மனைவிமார்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இதைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

وَامْرَأَةً مُّؤْمِنَةً إِن وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَن يَسْتَنكِحَهَا خَالِصَةً لَّكَ مِن دُونِ الْمُؤْمِنِينَ
அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்;33:51.

சில பெண்கள் நபியிடம் வந்து இவ்வாறு தன்னை அவர்களுக்கு ஒப்படைப்பதாக சொன்ன பொது மறுத்து விட்டார்கள் என்ற ஹதீஸ் புகாரி போன்ற நூற்களில் வந்துள்ளன.

இப்போது சொல்லுங்கள் நபி நம்மைப் போன்றவர்களா?



சிறப்பு:-(5)
நம் நபிக்கு முன் அன்னாரின் சப்தத்தை விட தன் சப்தத்தை யாராவது உயர்த்தி பேசினால் அவ்வாறு பெசியவரின் நன்மைகள் அழிந்து விடும், அந்த அளவு நபி சல்லள்ளஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்பாக அடக்கமாக இருக்க அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.அல்லாஹ் கூறுகிறான்:

முஃமின்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள்; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன்; நன்கறிபவன்.
முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.
49:1,2.
இப்போது சொல்லுங்கள் நபி நம்மைப் போன்றவர்களா?
 



சிறப்பு:-(6)
தொடர் நோன்பு என்பது நபியைத் தவிர மற்றவர்களுக்கு ஆகுமாக்கப்படவில்லை அதாவது ஒருவர் நோன்பு வைத்து அதை திறக்க வேண்டிய நேரம் வரும் போது திறந்து விட வேண்டும் அதன் பிறகுதான் அடுத்த நோன்பை ஆரம்பிக்க வேண்டும்,அவ்வாறு நோன்பு திறக்காமல் அடுத்த நோன்பை ஆரம்பிப்பதை நபி{ஸல்]அவர்கள் தடுத்தார்கள்,ஆனால் இவ்வாறான நோன்பை நபியவர்கள் வைக்கக்கூடியவர்களாக இருந்தனர் அதை கண்ட நபித்தோழர்கள் காரணம் கேட்ட போது பதிலளித்த நபியவர்கள்"நான் உங்களைப் போன்றவர் அல்ல நான் எனது இரட்ச்சகனின் சமூகத்தில் இரவு தங்குகிறேன் அந்த இரட்ச்சகன் எனக்கு உணவும் குடிப்பும் வழங்குகிறான்"[நூல்:புகாரி முஸ்லிம்].
இப்போது சொல்லுங்கள்! நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்மைப் போன்றவர்களா?
 


சிறப்பு:-(7)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவிமார்களில் ஒருவர் ஏதாவது தவறு செய்தால் [அல்லாஹ் காப்பாற்றுவானாக]அதற்கான தண்டனை மற்றவர்களுக்கு வழங்கப் படுவதை விட இரட்டிப்பாக வழங்கப்படும் அவ்வாறே நன்மை செய்தால் அதற்கான கூலி இரட்டிப்பாக வழங்கப்படும்.இதில் முதல் வகை[நடக்காது நபி அவ்வளவு பரிசுத்தமானவர்கள்] நடக்கவில்லை இரண்டாவது வகையை கவனிக்கையில் இது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்காக வழங்கப்பட்ட சிறப்பாகும்.
அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக!

33:30 يَا نِسَاءَ النَّبِيِّ مَن يَأْتِ مِنكُنَّ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ يُضَاعَفْ لَهَا الْعَذَابُ ضِعْفَيْنِ ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا
33:30. நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!

33:31 وَمَن يَقْنُتْ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا نُّؤْتِهَا أَجْرَهَا مَرَّتَيْنِ وَأَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيمًا
33:31. அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.

[நபியவர்களின் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது இட்டுக்கட்டப்பட்ட போது அதைக் கண்டித்த அல்லாஹ் அதற்காக பத்துக்கு மேற்பட்ட வசனங்களை இறக்கி வைத்து ஆயிஷா ரளியல்லாஹுஅன்ஹா அவர்களை பரிசுத்தமானவர்கள் என்று பகிரங்கப் படுத்தினான் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்]

இப்போது சொல்லுங்கள் நபி நம்மை போன்றவர்களா?





சிறப்பு:-(8)
ஏழைகள் யாராக இருந்தாலும் ஜகாத் பெறுவதற்கு தகுதி இருந்தால் வாங்கலாம்,ஆனால் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்கோ அவர்களுடைய குடும்பத்தினருக்கோ யாருக்கும் ஜகாத் பெருவதும் அதை சாப்பிடுவதும் அறவே கூடாது,இது நம் நபியின் தனிச்சிறப்புகளில் ஒன்று எனலாம்,காரணம் அல்லாஹ் அவர்களை அந்தளவுக்கு உயர்வானவர்களாகவும் பரிசுத்தமனவர்களாகவும் ஆக்கியுள்ளான:

عن أبي هريرة رضي الله عنه قال : أخذ الحسن بن علي رضي الله عنهما تمرة من تمر الصدقة ، فجعلها في فيه ، فقال النبي صلى الله
عليه وسلم : كخ كخ ليطرحها ، ثم قال : أما شعرت أنا لا نأكل الصدقة
صحيح البخاري ( 2 / 542 ) صحيح مسلم ( 2 / 571-
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:ஒரு முறை நபியின் பேரன் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் [சிறுவராக இருந்த போது]ஸதகாவின் பொருளாக வந்த பேரித்தம் பழத்தை எடுத்து வாயில் வைத்து விட்டார்கள்,இதனை கண்ட நபியவர்கள் ஹஸன் அவர்களின் வாயில் இருந்த பேரித்தம் பழத்தை எடுத்து தூக்கி எரிந்து விடுமாறு கூறி விட்டு மகனே!நாம் ஸதகா [ஜகாத்]பொருளை சாப்பிடுவது கூடாது என்று உனக்கு தெரியாதா?என்று கூறினார்கள்.ஆதாரம்:புகாரி,முஸ்லிம்.

இந்தளவு அவர்களை அல்லாஹ் அந்தஸ்தால் உயர்த்தி வைத்திருக்கும் போது,இப்போது கூறுங்கள்!





சிறப்பு:-(9)
நாமெல்லாம் உறங்கினால் நமது இதயமும் சேர்ந்து உறங்கும் அதனால் வெளியில் என்ன நடக்கிறது என்று நாம் உணர முடிவதில்லை ஆனால் நமது கண்மணியான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறங்கினால் கண்கள் உறங்கும் இதயம் உறங்காதாம்,அதனால் நபியின் உறக்கத்தால் உழு முறியாது,அன்னாரின் தூக்கத்தில் காணும் கனவு வஹி[இறை அறிவிப்பு]எனக் கருதப்படும்.[மற்ற இறைத்தூதர்களுக்கும் இதே சிறப்பு உண்டு]

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்:
என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) வீட்டில் நான் ஓரிரவு தங்கினேன். இரவில் ஒரு பகுதி கழிந்ததும் நபி(ஸல்) (உறக்கத்திலிருந்து) விழித்தார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த தோல் பையிலிருந்து சுருக்கமாக உளூச் செய்தார்கள். பின்னர் எழுந்து தொழலானார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) செய்தது போன்று உளூச் செய்து அவர்களின் இடப்புறமாக நின்று கொண்டேன். அவர்கள் என்னைப் பிடித்துத் தம் வலப்புறமாக நிறுத்தினார்கள். பின்னர் அல்லாஹ் நாடியதைத் தொழுதுவிட்டு குறட்டைவருமளவு படுத்துறங்கினார்கள். அவர்களிடம் (ஸுப்ஹ்) தொழுகை பற்றி முஅத்தின் அறிவிப்பதற்கு வந்தபோது அவருடன் தொழுகைக்காகச் சென்றார்கள். (மீண்டும்) உளூச் செய்யாமலே தொழுகை நடத்தினார்கள்.
நபி(ஸல்) அவர்களின் கண்கள் உறங்கும்; உள்ளம் உறங்காது என்று சிலர் கூறுகிறார்களே என்று அம்ரிடம் கேட்டேன். அதற்கவர், 'நபிமார்களின் கனவுகள் வஹீயாகும்' என்று கூறிவிட்டு,"மகனே! உன்னை நான் அறுப்பதாகக் கனவு கண்டேன். (திருக்குர்ஆன் 37:102) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள் என சுஃப்யான் கூறுகிறார்.புகாரி 859.

ஆயிஷா [ரலி]அவர்கள் கூறுகிறார்கள்: 'இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன. என் உள்ளம் உறங்குவதில்லை' என்று விடையளித்தார்கள்' என்றும் ஆயிஷா(ரலி) கூறினார்.புகாரி,1147.
நம்மில் யாருக்காவது இந்த சிறப்பு உண்டா?இல்லையல்லவா?

இப்போது சொல்லுங்கள் நபி நம்மைப் போன்றவர்களா?
 



சிறப்பு:-(10)

நமக்கெல்லாம் ஐந்து நேரத்தொழுகையைத் தவிர மற்ற எந்த தொழுகையும் கட்டாயக் கடமை இல்லை நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தஹஜ்ஜுத் என்ற இரவுத்தொழுகையும் கட்டாயமாக இருந்தது.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا
17:79.
இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்.

நபி [ஸல்]அவர்கள் கூறுகிறார்கள்:மூன்று காரியங்கள் உங்களுக்கு சுன்னத்தாகவும் எனக்கு அவை கடமையாகவும் உள்ளன,(அ)வித்ரு தொழுவது,(ஆ)மிஸ்வாக்[பல்லை விலக்கி சுத்தம்]செய்தல்,(இ)இரவுத்தொழுகை[தஹஜ்ஜுத்]தொழுதல்.-பைஹகி.

நபிக்கு வழங்கப்பட்ட இந்த தனிக்கடமை நபியின் தனிச்சிறப்பையே காட்டுகிறது,

இப்ப சொல்லுங்க நபி நம்மை போன்றவர்களா?



 
சிறப்பு:-(11)நாம் இந்த உலகில் வாழ்ந்து மரணமடையும் போது நாம் விட்டுச்செல்லும் பொருள்களுக்கு நமது பிள்ளைகள் மனைவி பெற்றோர் மற்றும் இதர உறவினர் நமது பொருளுக்கு வாரிசாக[பங்காளி]ஆகிறார்கள் ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் விட்டுச்சென்ற எந்த சொத்துக்கும் யாரும் வாரிசாக முடியாது,
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:நாங்கள் இறைத்தூதர்கள் எங்கள் பொருள்களில் யாரும் பங்காளியாக உரிமை கொண்டாட முடியாது,எங்கள் பொருள்கள்[எங்களின் மறைவுக்குப் பின்]அல்லாஹ்வின் பாதையில் தர்மப் பொருளாக ஆக்கப்படும்.-அல்ஹதீஸ்

இந்த சட்டம் நமக்கு கிடையாதல்லவா?

இப்போது சொல்லுங்கள் நபி நம்மைப் போன்றவர்களா?


மகிழ்ச்சியாக வாழ..


ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை
உருவாக்கிக் கொள்ளுங்கள்.
***************
உங்களது அன்றாட
நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன்
வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.
***************
எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச்
செய்து கொண்டிருங்கள்.அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும்.
***************
ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.
***************
நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.
***************
நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.
***************
நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.
***************
மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள்.
***************
மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
***************
நன்றி:- நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.

கண்ணீர்**


அம்மா பாசத்தில்
அப்பா இயலாமையில்
அண்ணன் பாகத்தில்
அக்கா அவசியத்தில்
தங்கை ரகசியத்தில்


தம்பி தவறுகளில்
கணவன் பிரவசத்தில்
மனைவி அவசரத்தில்
உறவுகள் மரணத்தில்
நட்பு பிரிவில்
காதலி கைவிடலில்
காதலன் நிராகரிப்பில்


குழந்தை பசியில்
முதலாளி நஷ்டத்தில்
தொழிலாளி கஷ்டத்தில்
போராளி வெற்றியில்
மாணவன் தோல்வியில்
அரசன் அழிவில்
அடிமை இழிவில்
வீடற்றவன் மழையில்


விழும் கண்ணீரில்
வழிகிறது
ஆயிரம் அர்த்தங்கள் -nantri:krpsenthil.com

இந்த கண்ணீரையெல்லாம் விட
சிறந்த கண்ணீர் எது தெரியுமா?

நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்:
இரு துளிகள் அல்லாஹ்விடம் மிக மதிப்பு வாய்ந்ததாகும்[1]அல்லாஹ்வின் பாதையில் போராடிய போது சிந்தப்படும் இரத்தத்துளி,[2] அல்லாஹ்வை அஞ்சி அழும்போது சிந்தப் படும் கண்ணீர் துளி.

தாய், சேய்.


அம்மா:செல்லமே என் செல்வமே!-எனக்கு
சொந்தமான தங்கமே !
வெந்த இதயத்தோடு நொந்து நொந்து 
துடிக்கிறேன் .......!
அன்னமூட்டும் உன்னை
அள்ளி அணைக்க ஆசைதான்-ஆனால்
என்ன செய்ய எனக்கு இறைவன்,இரண்டு 
கரங்களையும்தான் பிடுன்கிட்டானே
மகன்:
கலங்காதே அம்மா! காப்பாற்றும் அல்லாஹ்
நம்மை கைவிட மாட்டான்.
கையினால் அணைக்கா விட்டால் என்ன
கருவுக்குள் என்னை கவனமாய்
சுமந்து காத்தவள் நீயல்லவா?
உயிர் கொடுத்து எனக்கு உலகத்தைக்
காட்டிய உன்னை நன்றியோடு-என்றும்
காப்பாற்றுவேன்.
9 ·  · 

பொன்மொழிகள்


எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே. உன் பணியை ஊக்கமுடன் செய்.

- அரவிந்தர்.

தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத மனிதன் தனக்குள் உள்ள திறமையையும் வெற்றியாக மாற்ற முடியாது.

- எட்கார் ஆலன்யோ.

யாரும் எதையும் சொல்லலாம். ஆனால் எல்லோருடைய சொல்லையும் நம்பாதீர்கள்.

- மாண்டேயின்.

அறிவை விலைக்கு வாங்க முடியும். ஆனால் உணர்ச்சி, அன்பு ஒருநாளும் சந்தைக்கு வருவதில்லை.

- ஜே. ஆர். லெவல்.

வாழ்க்கையில் சவால்களைச் சந்தித்து இறுதிகாலம் வரையில் உற்சாகத்துடன் வாழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

- மால்ட்ஸ்.

கோபம் என்பது வைர அட்டிகை போன்றது. அதை எப்போதும் அணிந்திருந்தால் அதன் மதிப்பு போய்விடும். வைரமா? என்கிற சந்தேகமும் வந்துவிடும்.

- அனுராதாரமணன்.

மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே.

- மார்ட்டின் புபெர்.

இளைத்துப் போன குதிரைக்கு அதனுடைய சொந்த வால் கூட சுமையாகத் தெரிகிறது. ஆனால் அது உண்மையல்ல.

- ஓட்பே.

المسلمون يصلون في كل مكان Muslims pray in every place

தொழுகை மிக முக்கியமான கடமை,அதை எந்த சூழ்நிலையிலும் விடுவதற்கு அனுமதி இல்லை,மனிதன் தன் சுய நினைவில் இருக்கும் வரை அதை நிறைவேறியே ஆக வேண்டும் அபாயங்கள் நிறைந்த போரிலும் கூட தொழுகை நேரம் வந்தால் அதை விட்டு விடாமல் எவ்வாறு தோழ வேண்டும் என்ற சட்டத்தை குர்ஆனில் அல்லாஹ் கூறியதிலிருந்தே அதன் முக்கியத்துவம் புரிகிறதல்லவா?

தொழுகை கடமையாக்கப்பட்ட காலம் இடம் எது என கவனித்தாலே அதன் முக்கியத்துவம் நமக்கு விளங்கும்.
நபி [ஸல்]அவர்களின் மக்கா வாழ்வில் மார்க்க பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்த சமயம் அதனால் ஏற்பட்ட துன்பங்கள் என்ன என்று நமக்கெல்லாம் நன்றாக தெரியும் அப்போது நபிக்கு பெரிதும் உதவியாக இருந்தவர்கள் இருவர் [1]அபூதாலிப் [2]அன்னை கதீஜா[ரலி]ஆவர்.
இவ்விருவரும் மரணமடைந்த சமயம் காபிர்கள் அன்னாருக்கு இன்னும் அதிக துன்பங்களை கொடுக்க ஆரம்பித்தனர்,

இதை அடுத்து தாயிப் என்ற ஊருக்கு சென்று பிரச்சாரம் செய்ய சென்ற போது ஏற்பட்ட துயரங்கள் மிக கடுமையானவை,இவ்வாறு பல வகையில் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த நபி அவர்களுக்கு அல்லாஹ் மன ஆறுதலையும் மகிழ்ச்சியையும் உருவாக்குவதற்காக மிஃராஜ் என்ற விண்ணேற்ற பயணத்தின் மூலம் நபியை தன்னிடத்திற்கு நேரடியாக அழைத்து இந்த தொழுகையை கொடுத்தான்.
ஆரம்பத்தில் ஐம்பது நேரத்தொழுகையாக ஆக்கப்பட்டு பின் ஐந்தாக ஆக்கப்பட்டு இந்த ஐந்தில் ஐம்பதின் நன்மை உண்டு என்ற வாக்கோடு அல்லாஹ் இதை கொடுத்து அனுப்பினான்.

எனவே [1]எப்போதும் விட அனுமதி இல்லை, [2]இதை தொழுதால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்,[3]இந்த ஐந்து நேரத்தொழுகையையும் ஒருவர் தொழுதால் அவருக்கு ஐம்பது நேரம் தொழுத நன்மை வழங்கப்படும்,

எனவே விடாமல் தொழுதால் தொடாது துன்பம். இந்த வீடியோவை பாருங்கள் மெய் சிலிர்க்கிறது,அல்லாஹு அக்பர் கபீரா.

எனக்குள் பூத்தவை எப்படி இருக்கு?[2]

வலிக்கிறது உள்ளே 
வாழ்க்கையின் சூழல் கண்டு,
விழித்திரையில் கண்ணீரோடு
விம்முகிறேன் தினம் தினம்.

அர்த்தமுள்ள வாழ்க்கை எங்கே?
வருத்தத்தோடு தேடுகிறேன்,
பெருத்த ஏமாற்றமே -என்னுள்
திருத்தங்களின் எதிர்பார்ப்புகள்,

சிலரின் போலித்தனங்கள்
சிரிப்புகளை எல்லாம் சந்தேகிக்கிறது
நல்லவர்களே ஆனாலும்
நாடிப்பிடித்து பார்க்கச்சொல்கிறது