இறைவா!எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக!மறுமையிலும் நன்மை அளிப்பாயாக!(நரக)நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக! ஆமீன்
புதன், 23 பிப்ரவரி, 2011
சனி, 22 ஜனவரி, 2011
பாதுகாப்புவேண்டுமா?
அப்போதுதான் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்களும் அன்னாரது மக்கா நகரதோழர்களும் மதீனா வந்துஆகவேண்டிய ஒவ்வொரு வேலையையும் கொஞ்சம் கொஞ்சமாகமுடித்து கொண்டிருக்கிறார்கள்,இன் நிலையில் ஒரு பக்கம் மக்காகாபிஃர்கள்" நம்மை எதிர்த்துக்கொண்டு ஊரை விட்டும் சென்றமுஸ்லிம்கள் மதீனாவில் நிம்மதியாக இருந்து விடக்கூடாது என்று"பல சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்க,மறுபக்கம் மதீனாவில்இருந்த இணை வைப்பாளர்களும்,யூதர்களும் நபியின்வருகையால் பல இலாபங்களை இழந்த பொறாமையால் வெந்துபோய் முஸ்லிம்களுக்கு எதிராக ப்ல திட்டங்களைத்தீட்டியவர்களாக இருந்தனர்,ஆக நபியவர்களுக்கு எதிராகநாலாபுறங்களிலும் கொலை முயற்சிகள் நடை பெற்றுவந்தன.இந்த சூழ் நிலையில்தான் ஒரு முறை ரசூலுல்லாஹிஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின்தோழர்களை நோக்கி "இன்று இரவு எனது தோழர்களில்யாராவது எனக்கு காவல் நின்றால் நன்றாக இருக்கும்" எனக்கூறினார்கள். அன்று இரவு [எங்களின் வீட்டுக்கு வெளியில்]ஆயுதங்களின் சப்தத்தை நான்கள் கேட்டோம்.யாரது? எனநபியவர்கள் கேட்ட போது,"நான் ஸஃது இப்னு அபீ வக்காஸ்வந்திருக்கிறேன்,தங்களுக்காக காவல் நிற்க வந்துள்ளேன்,என்றுகுரல் வந்தது.அன்று இரவு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நிம்மதியாக தூங்கினார்கள் எந்தளவுக்கெனில்அன்னாரது குரட்டை சப்தத்தை நான் கேட்டேன்,.என அன்னைஆயிஷா ரழியல்லாஹு அன் ஹா அவர்கள்அறிவிக்கிறார்கள்.இவ்வாறாக நபியவர்களுக்காக காவல்நின்றவர்கள் ஸஃது ரழியல்லாஹுஅன் ஹு அவர்களைப்போலமற்ற சில நபித்தோழர்களும் இருந்தார்கள்,அவர்களில் சிலர்உப்பாது இப்னுல் பிஷ்ரு,ஜுபைருப்னுல் அவாம், ஸஃதுப்னுமுஆத்,ஆகிய இவர்களும்,இன்னும் சிலநபித்தோழர்களும்[ரழியல்லாஹுஅன் ஹும்]காவல் முறை வைத்துகாவல் காத்து வந்தனர்.அல்லாஹ் எப்போதும் தனது சேவையைக்குறிக்கோளாகக் கொண்டவர்களை இவ்வாறு அச்சத்திலேயேவிட்டு விட மாட்டான் என்ற பொது நியதிக்கு ஏற்ப வசனம்ஒன்றை தனது தூதருக்கு அருளினான்:தூதரே! உமது இரட்சகன்உமக்கு இறக்கியருளியவற்றை எத்தி வையுங்கள்;மேலும்அல்லாஹ் தங்களை மக்களின் தீமைகளிலிருந்து காத்தருள்வான்;.[மாயிதா:67].
வெள்ளி, 21 ஜனவரி, 2011
மதீனாவாசிகள் மீது எம்பெருமானார்
ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த போர் பொருட்களை மிக அதிகமாக இஸ்லாத்தில் இணைவதற்காகவும், இஸ்லாத்தில் இணைந்த புதிய முஸ்லிம்களுமான குரைஷி மக்களுக்கு சூரத்து தவ்பாவின் 60வது வசனத்திற்கு ஒப்ப அல்லாஹுடைய தூதர் அவர்கள் பிரித்துக் கொடுத்தார்கள். ஆனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அன்சாரிகளுக்கு 4 ஒட்டகங்கள் அல்லது அதற்கு சமமான ஆடுகள் கொடுக்கப்பட்டன. இதனால் அன்சாரி ஸஹாபிகள் மிகுந்த மன வேதனையடைந்தார்கள். “யுத்தங்கள் ஏற்படும் போது நாம்தான் அவரது தோழர்கள். யுத்தப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் பொழுது அவரது குடும்பத்தினரும் அவரது மக்களும் ஆவார். இது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால் நாம் ஏற்றுக் கொள்வோம், அது அல்லாது இது தூதருடைய உள்ளத்தில் எழுந்த எண்ணமாக இருந்தால், நமக்கும் சலுகை செய்யுமாறு நாம் அவரை வேண்டுவோம்” என்றனர் அன்ஸாரிகள்.இதை அன்ஸாரிகளின் பிரதிநிதியான ஸஅத் இப்னு உபாதா (ரழி) அவர்கள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றார்கள். இதை கேட்ட நபி (ஸல்) “ஸஅதே! இந்த விடயத்தில் உங்கள் நிலை என்ன? என கேட்டப் பொழுது, அதற்கு ஸஅத் (ரழி) அவர்கள், நானும் அன்ஸாரிகளின் கருத்துடன் ஒத்து இருக்கிறேன்” என சொன்னார்கள். அதை கேட்ட முஹம்மது (ஸல்) அவர்கள் அவர்களை கைதிகளை அடைத்து வைத்திருந்த இடத்தில் அன்ஸாரிகளை ஒன்று கூட்டினார்கள்.அவர்களிடம் வந்த நபி (ஸல்) அவர்கள், ஓ! அன்ஸாரிகளே! எனக்கெதிரான எண்ணங்கள் உங்கள் உள்ளங்களில் எழுந்துள்ளன என்பதை நான் அறிகிறேன் என்றவர்கள். உங்களை நான் தவறியவர்களாகக் கண்ட போது இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நீங்கள் ஏழைகளை இருந்தப் பொழுது இறைவன் உங்களை செல்வந்தராக்கவில்லையா? நீங்கள் ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டியவர்களாக இருந்த உங்களை அல்லாஹ் உங்கள் இதய்ங்களை ஒன்றுபடுத்தவில்லையா? என கேட்டதும், அங்கு குழுமி இருந்த அன்ஸாரிகள். நிச்சயமாக அவ்வாறே! அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அன்பும் கருணையும் மிக்கவர்கள் என்றார்கள்.அதை தொடர்ந்து அல்லாஹுடைய தூதர் கண்ணியமிக்க முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிகளை பார்த்து, என்னை எதிர்த்து பேசமாட்டீர்களா? என கேட்டார்கள். அதைக் கேட்டதும் அன்ஸாரிகள் கலக்கமுற்றனர். உங்களை எதிர்த்து நாங்கள் எப்படி பேச முடியும்? என்றார்கள்.அதை கேட்ட நாயகம் (ஸல்) அவர்கள், நிச்சயமாக நீங்கள் விரும்பினால் உண்மையாகவே என்னைப் பார்த்து நீங்கள் இவ்வாறு கேட்கலாம்? அவமதிக்கப்பட்டவராக நீர் எங்களை வந்து சேர்ந்தீர், நாங்கள் உம்மை கவுரவித்தோம். துணையின்றி தனித்தவராக நீர் வந்தீர், நாங்கள் உமக்கு உதவி செய்தோம். வெளியேற்றப்பட்டவராக நீர் வந்தீர், நாம் உமக்கு அடைக்கலம் தந்தோம். நாம் உமக்கு ஆறுதல் தந்தோம் என நீங்கள் கேட்கலாம்.மேலும் தொடர்ந்த அல்லாஹுடைய தூதர் அவர்கள், “ஓ! அன்ஸாரிகளே! நான் உங்களை உங்களது இஸ்லாத்தின் பொறுப்பில் விட்டுள்ள நிலையில், அல்லாஹ்வை அடிபணிய அவர்களது உள்ளங்களை இணங்கச் செய்யப் பயன்படுத்திய இவ்வுலகத்தின் அற்பப் பொருட்களுக்காக உங்கள் உள்ளங்கள் சஞ்சலப்படுகிறதா?ஓ! அன்ஸாரிகளே! மக்கள் ஒட்டகங்களையும், செம்மறி ஆடுகளையும் அவர்களது வீட்டிற்கு எடுத்துச் செல்ல, நீங்கள் உங்கள் வீட்டிற்கு அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எடுத்துச் செல்வதில் திருப்தி இல்லையா? அன்ஸார்கள் ஒரு வழியிலும், மற்றவர்கள் வேறு ஒரு வழியிலும் சென்றால், உங்கள் நபியாகிய நான் அன்ஸாரிக்ள் செல்லும் வழியில்தான் செல்வேன். அன்ஸாரிகள் மீதும், அன்ஸாரிகள் மக்கள் மீதும், அவர்களது மக்களின் மக்கள் மீதும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக! என துஆச் செய்ததும், அங்கு கூடி இருந்த அன்ஸாரி ஸஹாபிகள் தம் தாடிகள் நனையும் வரை கண்ணீர் விட்டு அழுதார்கள்.எங்களது பங்காகவும், எமது உடமையாகவும் அல்லாஹ்வின் தூதரைப் பெற்றுக் கொள்வதில் நாம் முழு திருப்தி கொள்கிறோம் என்றார்கள்.
இறையச்சம்
அல்லாஹ் கூறுகிறான்:நம்பிக்கையாளர்களே!உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது கடமையாக்கப்பட்டிருந்ததைப் போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.[அதனால்] நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்.(2:183)
அன்பானவர்களே! மனிதனின் வாழ்வு பல சூழ் நிலைகளால் சூழப்பட்டுள்ளது. தவறுகளை விட்டும் தவிர்ந்து கொள்வது என்பது மிகவும் சிரமான ஒன்றாகவே உள்ளது, இதற்கெல்லாம் காரணம்;இந்த உலகத்தை அல்லாஹ் ஒரு சோதனையாக படைத்துள்ளான், அந்த சோதனைகளை சிலவற்றின்மூலம் அவன் உண்டாக்கியுள்ளான்.
மனமயக்கத்திற்கு காரணம் நான்கு பேர். ஆம்! நாம் அல்லாஹ்வை பயந்து வாழ வேண்டும் என்று என்னதான் முயன்றாலும், சில சந்தர்ப்பங்கள் நம்மையும் மிகைத்து நிலைத்தடுமாறச்செய்து விடுகின்றன. அந்த சந்தர்ப்பங்களின் கார்ணகர்த்தாக்கள் நான்குபேர் எனலாம். 1) உலக ஆசைகள், 2)குடும்ப பாசங்கள், 3) ஷைத்தான்[என்ற நமது விரோதி], 4)நமது உள்ளம்[மனோ இச்சை], இவற்றில் நமக்கு மிகவும் ஆபத்தானது நமது உள்ளம்தான்,காரணம்; இன் நான்கில் நமது உள்ளத்தைத்தவிர மற்ற மூன்றும் நம்மைவிட்டும் தனியாக உள்ளன,ஆனால் நமது உள்ளம் மட்டுமே நம்கூடவே இருந்து குழி பறிக்கின்றது. எனவேதான் யூஸுஃப்[அலை] அவர்களின் வார்த்தைகளை அல்லாஹ் தனது அருள்மறை குர் ஆனில் இவ்வாறு கூறுகிறான்:அன்றி "நான்(தவறுகளிலிருந்து)பரிசுத்தமானவன்"என்று என்னைப்பற்றி நான் கூறவில்லை,ஏனென்றால் நிச்சயமாக என் இறைவன் அருள் புரிந்தாலன்றி(மனிதனின்)மனம் பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது.(12:53).. நம்மைவிட்டும் நீக்கப்பட முடியாத நம் இதயத்தின் தீங்கை விட்டும் தப்பிக்கவேண்டுமென்றால்;அந்த இச்சையை நம் சொல்லைக் கேட்கும் வகையில் பயிற்சி செய்து பழக்கப்படுத்தவேண்டும். அந்த பயிற்சியின் பலன் தான்"தக்வா"இறையச்சமாகும். இந்த இறையச்சம் என்ற கேடயத்தின் மூலம் மனோ இச்சையின் தீங்குகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொண்டால் மறுமையில் இன்பமே இன்பம்தான்.இதையே அல்லாஹ் ,எவர் தன் இறைவனின் சன்னிதியில்(விசாரணைக்காக)நிற்பதைப்(பற்றி)பயந்து (தனது தவறான)மனோ இச்சையை விட்டும் தன்னை தடுத்துக்கொண்டாரோ,அவர் செல்லுமிடம் சுவனம்தான்.(79:40,41)
இறையருள் இன்றி முடியாது.
தோழர்களே! இந்த இறையச்சம் என்ற பாதுகாப்பு அரண் நம் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும் மட்டும் முடியக்கூடிய ஒன்றல்ல;இவற்றுக்கும் மேலாக இறையருள் தேவை,நாம் செய்யும் முயற்சிக்கும் அந்த இறையருள் அவசியம். எனவே இந்த "தக்வா"இறையச்சத்தை அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அன்னை ஆயிஷா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:ஒரு முறை நபியவர்களை எனது வீட்டில் தேடினேன்,காண முடியவில்லை,கதவைத்திறந்து பள்ளிவாசலில் பார்த்தேன்,அங்கு அன்னார் பூமியில் தலைவைத்து "ஸஜ்தா" செய்த நிலையில் "அல்லாஹும்ம ஆத்தி நஃப்ஸீ தக்வாஹா,வஜக்கிஹா அந்த ஃகைரு மன் ஜக்காஹா,அந்த வலிய்யுஹா வமவ்லாஹா".(அல்லாஹ்வே!எனது உள்ளத்திற்கு (உனது)பயபக்தியைத் தருவயாக!,அதனை பரிசுத்தப் படுத்துவாயாக!,நீதான் அதன் உதவியாளனும்,மற்றும் தலைவனுமாவாய்!என்று துஆ(பிரார்த்தனைச்செய்து கொண்டிருந்தார்கள்.அத்தகைய பயபக்தியை,அல்லாஹ் நமக்கும் தந்தருள்புரிவானாக!ஆமீன்
ஈமான்
ஒரு முறை நபி[ஸல்]அவர்களிடம் ஜிப்ரீல்[அலை]அவர்கள் வருகைத்தந்த போது,அன்னாரிடத்தில் நபியவர்கள்,பல கேள்விகளைக் கேட்டார்கள்,அவற்றில் ஒன்று;ஈமான்[விசுவாசம் கொள்ளுதல்]என்றால் என்ன?"என்பதாகும். அதற்கு ஜிப்ரீல்[அலை]அவர்கள் பதில் கூறினார்கள்:ஈமான் என்பது,அல்லாஹ்வையும்,அவனுடைய மலக்கு[வானவர்]களையும்,அவனது வேதங்களையும்,அவனது தூதர்களையும்,மறுமை நாளையும்,நன்மைத்தீமை யாவும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே நடைபெறும் என்பதையும்,மனப்பூர்வமாக நம்பி விசுவாசம் கொள்வதாகும். ஒரு முஸ்லிமின் உள்ளத்துக்குள் ஆணி வேர்களாக இருக்க் வேண்டிய அடிப்படை கொள்கைகள் இவை. இந்த நம்பிக்கைகளில் ஒன்றில் சந்தேகம் என்றாலும்,அவனை விசுவாசி[முஃமின்]என்று கூறுவது முடியாததாகும். இந்த நம்பிக்கைகளுடன் நற்செயல்களும் இணைந்திருப்பதும் அவசியமாகும்,அவை;1)வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,முஹம்மத்[ஸல்]அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவர்கள்,என்று நாவால் மொழிந்து உள்ளத்தால் உறுதி கொள்வதாகும்,2)தினமும் ஐந்து நேரம் தொழுவது,3)ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது,4)தனது பொருள்களைக் கணக்கிட்டு ஜகாத்[ஏழை வரி]கொடுப்பது,5)வசதியுடையவர்கள் ஹஜ் என்ற கடமையை நிறை வேற்றுவது. இவை யாவும் உண்மை விசுவாசியின் இலக்கணமாகும்.இந்த நம்பிக்கையும் விசுவாசமும், சில தன்மைகளை விசுவாசியின் இதயத்தினுள் பதிய வைக்க வேண்டும்,அதுதான் அவனது பூரண நம்பிக்கையின் வெளிப்பாடாகும். எல்லாம் அவனுக்காக, நபி[ஸல்]அவர்கள் அருளினார்கள்:"ஒருவர் கொள்கின்ற விருப்பும்,வெறுப்பும்,அவர் அடுத்தவருக்கு கொடுப்பதும், கொடுக்காமல் தவிர்த்துக் கொள்வதும்,[ஆக அனைத்தும்]அல்லாஹ்வுக்காக என்று ஆகி விட்டால்,அவரது ஈமான் பூரணத்துவம் பெற்றுவிட்டது,"[நூல்:முஸ்லிம்ஈமானின் இனிமை. மூன்று தன்மைகள் யாரிடத்தில் இருக்குமோ, அவர் ஈமானின் சுவையை அடைந்து கொள்வார்;1)மற்ற அனைத்து பொருட்களை விடவும் அல்லாஹ்வும், அவனது தூதரும் அந்த மனிதருக்கு பிரியமானவர்களாக ஆகி விடுவது. 2)யாரை அவர் விரும்பினாலும் அல்லாஹ்வுக்காக விரும்புவது.3)நெறுப்பில் நுழைவது எவ்வளவு வெறுப்பாக இருக்குமோ அந்தளவுக்கு குஃப்ரின்[இறை மறுப்பின்]பக்கம் மீழுவதை அவன் வெறுப்பது.[நூல் :புகாரி] நபி[ஸல்]அவர்கள் ஒரு துஆ வை அடிக்கடி கேட்பார்கள்:யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானைப் பிரியமானதாக ஆக்கி வை;. அதை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக்கி வை,உன்னை மறுப்பதையும்,பாவங்கள் புரிவதையும்,உனக்கு மாறு செய்வதையும் எங்களுக்கு வெறுப்பானதாக்கி வை,[நூல்:அஹ்மத்